ரிசாட்டுக்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணை மீதான நாடாளுமன்ற விவாதத்திற்கான நாள் குறிப்பு

அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள அவநம்பிக்கை பிரேரணை தொடர்பான விவாதம் எதிர்வரும் ஜூன் மாதம் 18 மற்றும் 19ஆம் திகதிகளில் இடம்பெறும் என சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார்.

எனினும் , இதற்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சியினர் நாள் குறித்து தீர்மானிக்க கூடிய கட்சித் தலைவர்கள் கூட்டம் இணக்கப்பாடின்றி நிறைவு பெற்றதாக தெரிவித்திருந்தனர்.

இதேவேளை , உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் அங்கம் வகிக்க போவதில்லை என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மகிந்த அமரவீர இதனை தெரிவித்துள்ளார்.

இந்த தெரிவுக்குழுவில் பங்கேற்காதிருப்பதற்கான தீர்மானத்தை ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பும் மேற்கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக் கொடுக்கும் நோக்கிலா? குறித்த தெரிவுக்குழு நியமிக்கப்பட்டுள்ளது என்ற சந்தேகம் நிலவுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

Share:

Author: theneeweb