தி.மு.க கூட்டணிக்கு மகத்தான வெற்றியைக் கொடுத்துள்ள மக்களுக்கு நன்றி: ஸ்டாலின்

சென்னை: தி.மு.க தலைமையிலான கூட்டணிக்கு மகத்தான வெற்றியைக் கொடுத்துள்ள மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி என திமுக தலைவர் ஸ்டாலின் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலுக்கான முன்னிலை நிலவரங்கள் மற்றும் முடிவுகள் தொடர்ச்சியாக அறிவிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இதில் பாரதிய ஜனதா கட்சி மட்டும் அறுதிப் பெரும்பான்மைக்கான 272 இடங்களுக்கு மேலாக முன்னிலை பெற்றுள்ளது. இதன் காரணமாக மோடி மீண்டும் இந்திய பிரதமராக வருவது உறுதியாகி விட்டது.

தமிழகத்தைப் பொறுத்த வரை திமுக கூட்டணி பெரும்பாலான இடங்களில் முன்னிலை பெற்று வெற்றியடையும் தருவாயில் உள்ளது.

இந்நிலையில் தி.மு.க தலைமையிலான கூட்டணிக்கு மகத்தான வெற்றியைக் கொடுத்துள்ள மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி என திமுக தலைவர் ஸ்டாலின் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

தலை வணக்கம் தமிழகமே! நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க தலைமையிலான கூட்டணிக்கு மகத்தான வெற்றியைக் கொடுத்துள்ள மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மக்கள் எங்கள் மேல் வைத்துள்ள நம்பிக்கையை எந்நாளும் காப்போம்! தமிழகத்தின் உரிமைகளை காக்க என்றும் குரல் கொடுப்போம்!

வெற்றி பெற்றமைக்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்துக்கள். ஜனநாயகம் மற்றும் ஒருங்கிணைந்த தனமையின் அடிப்படையிலான, முன்னேற்றத்தை நோக்கிய ஓர் அரசினை அவர் அமைப்பார் என நம்புகிறோம்; வாழ்த்துகிறோம்.

இவ்வாறு அவர் பதிவிட்டுளளார்.

Share:

Author: theneeweb