யாழப்பாணத்தில் 14809 குடும்பங்கள் வறட்சியால் பாதிப்பு – மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம்

யாழ் மாவட்டத்தில் 14809 குடும்பங்களை சேர்ந்த 49381 பேர் வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளதாக  மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.
யாழ் மாவட்டத்தில் 15  பிரதேச செயலக பிரிவுகளில்  எட்டு பிரதேச செயலக பிரிவுகளில்  இந்தப் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாகவும்,  இவர்களுக்கான குடி நீர் விநியோகத்தை மாவட்ட அனர்த்த முகாமைத்துவம் நிலையம் விநியோகித்து வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 அந்த வகையில் நெடுந்தீவில் 1031 குடும்பங்களும், வேலனையில் 2798 குடும்பங்களும். புங்குடுதீவில் 2422 குடும்பங்களும், காரைநகரில் 2760 குடும்பங்களும், சண்டிலிப்பாயில்  1041 குடும்பங்களும், சாவகச்சேரியில் 3361 குடும்பங்களும், கரவெட்டியில் 336 குடும்பங்களும், மருதங்கேணியில் 1060 குடும்பங்கும் வறட்சியினால்  பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம்  அறிவித்துள்ளது.
Share:

Author: theneeweb