முன்னாள் போராளிகள் குற்றச் செயல்களில் ஈடுபட மாட்டார்கள் – புனர்வாழ்வு ஆணையாளர் தெரிவிப்பு

புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள் குற்றச் செயல்களில் ஈடுபட மாட்டார்கள் என புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கான வாழ்வாதார உதவித்திட்டம் வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் இன்று இடம்பெற்றது.

அதில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

முன்னாள் போராளிகள் தான் வவுணதீவில் காவல்துறையினரைக் கொலை செய்தனர் என கூறப்பட்டது

ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யவில்லை என தெரிய வந்திருக்கின்றது.

புனர்வாழ்வு பெற்றவர்கள் அவ்வாறான செயலில் ஈடுபட மாட்டார்கள் என தான் கூறுவதாக புனர்வாழ்வு ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.

Share:

Author: theneeweb