அவசர கால சட்டத்தை மேலும் ஒரு மாதம் நீடிக்கும் யோசனை மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்!

அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்துக்கு நீடிக்க நாடாளுமன்றம் அங்கீகாரமளித்துள்ளது.

அவசரகால சட்டத்தை மேலும் ஒரு காலத்துக்கு நீடிப்பது தொடர்பான வர்ததமானி அறிவித்தல் கடந்த 22 ஆம் திகதி வெளியிடப்பட்டது.

இந்த நிலையில், அவசரகால நிலைமையை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதற்கான பிரேரணை, இன்று நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டு விவாதிக்கப்பட்டது.

இதையடுத்து, இன்று மாலை இடம்பெற்ற வாக்கெடுப்பில், குறித்த பிரேரணை 14 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

பிரேரணைக்கு ஆதரவான 22 வாக்குகளும், எதிராக 8 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

வாக்கெடுப்பு இடம்பெற்ற போது சபையில் மொத்தமாக 30 நாடாளுமன்ற உறுப்பினர்களே பிரசன்னமாகியிருந்தனர்.

இந்த நிலையில், அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாத காலம் நீடிக்கும் பிரேரணை மீது வாக்கெடுப்பைக் கோரிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிராக வாக்களித்தது.

ஏனைய 22 பேரும் பிரேரணையை ஆதரித்து வாக்களித்ததையடுத்து, குறித்த பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.

Share:

Author: theneeweb