வித்தியா கொலை: லலித் ஜயசிங்கவிற்கு எதிராக சட்ட மா அதிபரால் வழக்குத்தாக்கல்

 யாழ். பிராந்தியத்திற்கு பொறுப்பாகவிருந்த முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்கவிற்கு எதிராக சட்ட மா அதிபரினால் யாழ். மேல்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மாணவி சிவலோகநாதன் வித்தியா, கூட்டு பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட சுவிஸ்குமார் என்றழைக்கப்படும் மகாலிங்கம் சசிகுமார், தப்பிச் செல்வதற்கு உதவி புரிந்தமை தொடர்பில் பிரதி பொலிஸ் மா அதிபருக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

யாழ். விசேட பொலிஸ் குழுவினால் கடந்த 2015 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதியன்று சுவிஸ்குமார் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட சுவிஸ்குமார் தப்பிச்செல்வதற்கு உதவி புரிந்த மற்றுமொரு பொலிஸ் உத்தியோகத்தரான ஶ்ரீகஜனுக்கு எதிராகவும் சட்ட மா அதிபரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share:

Author: theneeweb