புராதன மயானம் திருகோணமலையில் கண்டுபிடிப்பு

திருகோணமலை குச்சவெளி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கன்னியா நிலாவெளி வீதியில் வள்ளுவர்கோட்டம் பிரதேசத்தில் புராதன மயானம் கண்டுபிடிக்கப்பட்டதாக திருகோணமலை தொல்பொருள் தினைக்கள அதிகாரி சுமனதாச தெரிவித்தார்.

கண்டுபடிக்கப்பட்ட மயானமானது சுமார் 2000 தொடக்கம் 2500 வருடகால பழமையானது என்று கணிக்க கூடியவாறு காணப்படுவதாக அவர் தெரிவித்தார்.

தற்போது ஐந்து கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் பல கல்லறைகள் காட்டுப்பகுதியில் இருக்கக்கூடும் எனவும் தெரிவித்த அவர், அதில் இரண்டு கல்லறைகள் தோண்டிய நிலையில் இருப்பதை அவதானிக்க கூடியவாறு காணப்பட்டது.

தோண்டப்பட்ட கல்லறைகள் குறித்து திரு. சுமனதாசவிடம் வினாவியபோது, புதையலுக்காக கல்லறைகள் தோண்டப்பட்டிருக்கலாம் என சந்தேகம் தெரிவித்தார்.

மேலும் தோண்டப்பட்ட கல்லறைகளில் ஒன்று சுமார் மூன்று மீற்றர் ஆழாமாக காணப்படுவதுடன் மற்றொன்றின் கற்கள் உடைக்கப்பட்டு அருகில் உள்ள வீட்டின் மதில் கட்டுவதற்காக பயன்படுத்தப்பட்டடுள்ளதை அவதானிக்க்கூடியதாக உள்ளது.

Share:

Author: theneeweb