காணி விடுவிப்புக்கள் தொடர்ச்சியாக இடம்பெறும்…

யாழ்ப்பாணம் – வலிகாம் வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் கட்டம் கட்டமாக மேற்கொள்ளப்பட்டு வந்த காணி விடுவிப்புக்கள் தொடர்ச்சியாக இடம்பெறும் என யாழ்ப்பாண மாவட்ட கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
பலாலியில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டி வழங்கும் நிகழ்வின் கலந்துக் கொண்ட போது ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
ஏப்ரல் 21ம் திகதி நாட்டில் யாரும் எதிர்பாரதவாறு பயங்கரவாத தாக்குதல் இடம்பெற்றதில், பலநூறு உயிர்கள் காவு கொள்ளப்பட்டன.
இந்தநிலையில், வலிகாமம் வடக்கில் 25 ஏக்கர் காணி விடுவிக்கப்படவிருந்த நிலையில் அது தற்போது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் குறித்த காணிகள் ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய விடுவிக்கப்படும்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் இராணுவத்தினரின் பாவனையில் உள்ள காணிகள் விடுவிப்பதில் எந்த வித பாதுகாப்பு அச்சுறுத்தலும் இல்லை.
மக்களுடைய காணிகள் தொடர்ச்சியாக விடுவிப்பதற்கு இராணுவத்தினர் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக யாழ்ப்பாண மாவட்ட கட்டளைத்தளபதி தர்சன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
Share:

Author: theneeweb