அமைச்சர் ரிஷாட், கிழக்கு ஆளுநர் ஹிஸ்புல்லாவிற்கும் எதிராக இரு முறைப்பாடுகள்

அமைச்சர் ரிஷாத் பதியூதீன் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா ஆகியோருக்கு எதிராக காவற்துறை தலைமையகத்தில் இரண்டு முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து, காவற்துறை ஊடக பேச்சாளரும், காவற்துறை அத்தியகட்சருமான ருவன் குணசேகர இதனை தெரிவித்துள்ளார்.

குறித்த முறைப்பாடுகள் தற்போது விசாரணைக்காக குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share:

Author: theneeweb