அத்துரலிய ரத்ன தேரர் அரசாங்கத்திற்கு விடுத்துள்ள எச்சரிக்கை

அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணை தொடர்பான நடவடிக்கையை முன்கொண்டுசெல்வதற்கு அரசாங்கம் இடமளிக்காவிட்டால், அதற்கு எதிரான பொதுமக்களுடன் இணைந்து தீர்மானம் ஒன்றை மேற்கொள்ள உள்ளதாக அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவநம்பிக்கை பிரேரணை விடயத்தில் ஜனநாயகத்திற்கு மதிப்பளிக்கப்பட வேண்டும்.

இல்லாவிட்டால், மக்களுடன் இணைந்து வீதிக்கு இறங்கும் தீர்மானத்தை மேற்கொள்ளவேண்டி ஏற்படும்.

எவ்வாறிருப்பினும், இந்த அவநம்பிக்கை பிரேரணையில் சில சந்தர்ப்பத்தில் தம்மால் வெற்றிபெறமுயும் என்று தான் நம்பிக்கை கொள்வதாகவும் அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

Share:

Author: theneeweb