உயிர்ததெழுந்த ஞாயிறு தாக்குதல் – பாராளுமன்ற தெரிவுக்குழுவிற்கு எவராலும் விடயங்களை முன்வைக்க முடியும்

ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவம் தொடர்பான விடயங்களை கண்டறிவதற்காக நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவுக்குழு ஒழுங்கு விதிகளுக்கு அமைவாக நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் விசாரனை நடத்தப்படுவதாகவும் தெரிவுக்குழுவின் அங்கத்தவரான சுகாதார போஷாக்கு மற்றும் சுதேசிய வைத்திய துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

இந்த தெரிவிக்குழு சபைக்கு எவரும் சமூகமளித்து விடயங்களை முன்வைக்க முடியும். சாட்சிகள் தொடர்பிலான விசாரனைகளின் போது ஊடகவியலாளர்களும் கலந்துக் கொள்வதற்கும் சபா நாயகர் நடவடிக்கை மேற்கொள்வார் என்றும் அவர் தெரிவித்தார்.

அலரி மாளிகையில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மகா நாட்டில் அமைச்சர் உரையாற்றினார். ஏப்ரல் மாதம் உயிர்த்தெழுந்த ஞாயிறு அன்று இடம்பெற்ற பயங்கரவாத சம்பவத்துடன் தொடர்புபட்டவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக அமைச்சர் கூறினார்.

இந்த சம்பவத்தில் காயம் அடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட ஆறு பேர் மாத்திரமே இறந்தனர். நாட்டின் அம்பியூலன்ஸ் சேவை வைத்திய சாலைகளில் செயல் திறன்மிக்க சேவைகளே காரணமாகும்.

சம்பவத்தின் போது சுகாதார அமைச்சு மற்றும் வைத்தியசாலை பணியாளர்கள் செயலாற்றிய முறையை பி.பி.சி உள்ளிட்ட சர்வதேச ஊடகங்கள் பாராட்டியதை அமைச்சர் சுட்டிக்காட்டினார

Share:

Author: theneeweb