கடந்த வருடம் 1064 துப்பாக்கிகள் மீட்பு

கடந்த வருடம் ஜனவரி முதலாம் திகதி முதல் நவம்பர் 30ஆம் திகதிவரையான காலப்பகுதியில் நாடு முழுவதிலும் ஆயிரத்து 64 துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவற்றில், 191 டி56 ரக துப்பாக்கிகளும், 90 கைத்துப்பாக்கிகளும், 12 தோட்டாக்கள் நிரப்பும் 55 துப்பாக்கிகளும், 34 விசேட வகை நாட்டுத் துப்பாக்கிகளும், 632 மேலும் பல நாட்டுத் துப்பாக்கிகள் உள்ளிட்ட துப்பாக்கி வகைகள் மீட்கப்பட்டுள்ளன.

துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் 865 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இந்த வருடத்தின் ஆரம்பத்துடன் துப்பாக்கியால் சுட்டு கொலைசெய்ய முயற்சித்த இரண்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

கொழும்பு ஜம்பட்டா வீதியில் நேற்று நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்ததுடன், களுத்துறை பகுதியில் வியாபாரி ஒருவரை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் ஒருவர் காயமடைந்தார்.
Share:

Author: theneeweb