ஆசிரிய சமூகத்தை இழிவுபடுத்துவதற்கு எதிராக ஆர்ப்பாட்டம்

வவுனியா கலாச்சார மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தின் பாடசாலை அபிவிருத்திச்சங்க பொதுக் கூட்டத்தில் ஆசிரியர் சமூகத்தை இழிவுபடுத்தியது.அத்துடன் விபச்சாரிகள் என்று தெரிவித்த கருத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று காலை தமிழ் மத்திய மகாவித்தியாலயத்திற்கு முன்பாக காலை 9மணியளவில் ஒன்றிணைந்த ஆசிரியர்கள் எதிர்ப்புத் தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டனர்.

ஆசிரியர்களாக நாங்கள் எவ்வாறான ஒரு பொறுப்பினை கையில் எடுத்திருக்கின்றோம் எங்களை விபச்சாரி என்று மன நோகடித்தல் இந்தச் சமூகம் தனது கடமையை விட்டுச் சென்றால் இப்பாடசாலை என்னாவது? .

மூவாயிரம் மாணவர்களின் கல்வி நிலை என்னாவது? அதிபர் மீது தவறு இருக்கலாம், ஆசிரியர்களில் தவறு இருக்கலாம், மாணவர்களில் தவறு இருக்கலாம் தவறு செய்யாத மனிதர்கள் இல்லை. தவறு இருந்தால் தகுந்த முறையில்  அவர்களுக்குத் தண்டனைகள் வழங்கப்படலாம்.

அதன் ஆதாரங்களை நிரூபிக்கின்ற வகையில் தண்டனைகளைப் பெற்றுக்கொடுக்கலாம் நாங்களும் அவற்றிற்கு மாறாக நிற்கவில்லை. ஆனால் பெரிய ஒரு சமூகத்தில் பெரிய ஒரு சபையில் ஒரு தனிமனிதனை அவர் எங்களின் பாடசாலையின் அதிபர் அவர் தண்டிக்கப்பட்டது எங்கள் அனைவருக்கும் கவலையளிக்கின்றது. சரியான ஒரு அவமானம் ஆசிரியராக நாங்கள் அவமானமடைந்திருக்கின்றோம்.

பெண் ஆசிரியராக அவமானமடைந்திருக்கின்றோம் இதற்கான இந்தக்குற்றங்களை முன்வைத்தவர்கள் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்கவேண்டும். அவதுரையில் நாங்கள் மாணவர்களிடம் செல்ல முடியவில்லை. எந்த முகத்தை வைத்துகொண்டு செல்வது? மாணவர்கள் எங்களிடம் கேள்வி கேட்கின்றார்கள். என்ன பதிலை சொல்வது? எமது கல்வித்திணைக்களம் இதற்கு தகுந்த நடவடிக்கையை மேற்கொண்டு இதனுடன் தொடர்புடைய ஆசிரியர்களை தற்காலிகமாக இடை நிறுத்தவேண்டும். இதுவே எங்கள் அனைவரின் கோரிக்கையாகும் என்று கண்டன ஆர்ப்பாட்டம் மேற்கொண்ட ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

கண்டன ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டபோது பாடசாலைக்குச் சென்ற வவுனியா தெற்கு கல்வி வலயப்பணிப்பாளர் முத்து இராதாகிருஷ்னன் பாடசாலை அதிபருடன் மேற்கொண்ட கலந்துரையாடலையடுத்து 30நிமிடம் ஆர்ப்பாட்டம் மேற்கொண்ட ஆசிரியர்கள் தமது ஆர்ப்பாட்டத்தை முடித்துக்கொண்டு வகுப்புக்களுக்குச் சென்றனர்.

கண்டன ஆர்ப்பாட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்குத் கருத்துத் தெரிவித்த வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியலாயத்தின் ஆசிரியரும் இலங்கை ஆசிரியர்கள் சேவைகள் சங்கத்தின் செயலாளருமான சிவகரன் பாடசாலையின் பழைய இரும்பு, சத்துணவில் பாரியளவில் முறைகேடுகள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

த. அமிர்தலிங்கம் இந்தப்பாடசாலைக்கு அதிபராக நியமிக்கப்பட்ட நாளிலிருந்து பெருந்தொகையான நிதியும் பொருந்தொகையான பாடசாலையின் பொருட்களும் குறிப்பாக பழைய இரும்புகள் மாணவர்களுக்கு வழங்கும் சத்துணவில் நிதிகள் திருடப்பட்டுக்கொண்டிருக்கின்றது இவ்விடயத்தில் அதிகாரிகள் எவ்விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை பாடசாலை ஒரு அசாதாரண சூழ்நிலையில் இருக்கின்றது.

ஆசிரியர்கள் தமது கருத்துக்களை முன்வைத்திருக்கின்றார்கள் அது அவர்களுடைய கருத்து அவர்கள் தமது கோரிக்கையினை நிறைவேற்றுவதற்கு அதிகாரமிருக்கின்றது எங்களுடைய சங்கம் என்ற ரீதியிலும் ஆசிரியர் என்ற ரீதியிலும் இந்த இலவசக் கல்வியை அனுபவித்து வருகின்ற பிள்ளைகளினுடைய தேவைகளையும் அடிப்படையாகக் கொண்டு சங்கம் என்ற ரீதியில் நான் ஒரு விடயத்தை இவ்விடத்தில் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

பல இலட்சம் ரூபா நிதி ஊழலாகியுள்ளது சமையலில் ஏராளமான நிதிகள் ஊழலாகியுள்ளது பாடசாலை மாணவர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தில் நிறைய நிதிகளில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளது நிதிகள் சூறையாடப்பட்டுள்ளது பாடசாலையிலுள்ள பழைய இரும்புகள் போன்ற பொருட்கள் அதிபரினால் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

ஆங்கில மொழி மூலம் நடைபெற்ற வகுப்புக்கள் அதிபரினால் தடை செய்து நிறுத்தப்பட்டுள்ளது. அவ்வளவு மாணவர்களும் வெளியே நிற்கின்றனர். அதிகாரிகளின் உறவினருக்கு அனுமதி வழங்கப்படுகின்றது அனுமதியின்போது ஊழல் இடம்பெறுகின்றது. பாடசாலையிலிருந்த பெருமளவு இரும்பு விற்பனை செய்யப்பட்டு அரசாங்க பொதுக்கணக்கில் இடப்படவில்லை இவ்வாறு எண்ணிலடங்காத தவறுகளை அதிபர் மேற்கொண்டு வருகின்றார்.

ஆசிரியர்களை கீழ்த்தரமான வார்த்தைகள் கொண்டு சர்வதிகாரியாக நடத்துகின்றார். தன்னை எதிர்ப்பவர்களை இடமாற்றம் செய்வது இவ்வாறு பாரதூரமான விளைவுகளை அதிபர் ஏற்படுத்துகின்றார்.

இதைப் புரிந்துகொண்ட பாடசாலைச் சமூகமும் பாடசாலை அபிவிருத்திச்சங்கமும் நேற்று கலாச்சார மண்டபத்தில் கூடி இவரைப் பதவி விலக்குவதற்குத் தீர்மானம் எடுத்த பிறகு இன்று அதிபர் மீண்டும் பாடசாலைக்கு வந்து நேற்று பதவி விலகுவதாக அறித்து மீண்டும் வந்து ஆசிரியர்களை வகுப்பறைக்குச் செல்லவிடாது தனக்கு ஆதரவாக பகிஷ்கரிப்பு மேற்கொள்ளுமாறு ஒன்றுகூட்டி பாடசாலைக்கும் கல்வித்துறைக்கு முரணான செயற்பாடுகளை மேற்கொண்டுள்ளார்.

தேசிய மட்டம் என்று பல மட்டங்களுக்கு முறையிட்டும் உடனடியாக இது குறித்த விசாரணையை நடத்தி அரச பொது நிதியைத்திருடுகின்ற எந்த அதிகாரியாக இருந்தாலும் அவர்கள் தண்டணைக்குட்படுத்த வேண்டும். என்று எங்களுடைய சங்கம் சார்பாகவும் பாடசாலையில் கல்வி கற்பிக்கின்ற ஆசிரியர் என்ற ரீதியிலும் கோரிக்கை விடுகின்றேன். என்று மேலும் தெரிவித்துள்ளார்.

Share:

Author: theneeweb