துணுக்காய் பிரதேச செயலகம் முன்பாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட நபர்

முல்லைத்தீவு – துணுக்காய் – உயிலங்குளம் 50 வீட்டுத்திட்டத்தை சேர்ந்த ஒருவர் இன்று காலை முதல் 6 கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளார்.

துணுக்காய் பிரதேச செயலகம் முன்பாக அவர் குறித்த உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளதாக எமது செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

உயிலங்குளம் பிரதேசத்தில் உள்ள 50 வீட்டுத்திட்ட பகுதி கடந்த 2012ம் ஆண்டு இந்திய அரசாங்க நிதியுதவியில் வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளன.

அங்கு பெண்கள் தலைமைத்துவ குடும்பங்கள் மாற்று திறனாளிகள் உள்ளிட்ட 50 குடும்பங்கள் குடியேற்றப்பட்டனர்.

இருப்பினும் அவர்களது அடிப்படைதேவைகள் பூத்தி செய்யப்படாத நிலையில் வீடுகள் தரமற்ற முறையில் அமைக்கப்பட்டதால் அங்கு வாழ முடியாத நிலையில் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
Share:

Author: theneeweb