தீனியவல பாலித்த தேரர் தாக்கல் செய்துள்ள மனு..

2015 மற்றும் 2018ம் காலப்பகுதியில் அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடி தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அலுவலகத்தில், அமைச்சர் றிசாட் பதியூதீன் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான மேலதிக விசாரணைகளை குறித்த ஆணைகுழுவின் தலைவர் மற்றும் ஆணையாளர் ஆகியோர் முன்னெடுக்கவுள்ளனர்.
தீனியாவல பாலித்த தேரரினால் இந்த மனு ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் கையளிக்கப்பட்டது.
அமைச்சர் றிசாட் பதியூதீன் வெளிநாட்டு பிரஜைகளுக்கு கிராம சேவகர் அத்தாட்சி பத்திரங்களை பெற்று கொடுத்து அவர்களை வாக்காளர் பெயர் பட்டியலில் உள்ளடக்கியுள்ளதாக அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் அவருக்கு மன்னாரில் 3000 ஏக்கர் காணி இருப்பதாகவும் அந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன்  சமூகங்களுக்கிடையே அவநம்பிக்கையை தோற்றுவிக்கும் வகையில் அமைச்சர் றிசாட் பதியூதீன் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா ஆகியோர் செயற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாக தீனியவல பாலித்த தேரர் தாக்கல் செய்துள்ள மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு நேற்று கல்வியமைச்சினால் டெப் கனிணி கொள்வனவு செய்யப்பட்ட போது இடம்பெற்றதாக கூறப்படும் முறைகேடுகள் தொடர்பான முறைப்பாடு குறித்து விசாரணை மேற்கொண்டது.
இந்தநிலையில், இன்றைய தினம் கல்வியமைச்சின் பாடசாலை சீருடை விநியோகத்தின் போது இடம்பெற்றதாக கூறப்படும் முறைப்பாடு தொடர்பில் இன்றைய தினம் விசாரணை நடத்தப்படவுள்ளது.
Share:

Author: theneeweb