வைத்திய பீடம் தவிர்த்த ஏனைய பீடங்கள் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது.

களனி பல்கலைக்கழகத்தின் வைத்திய பீடம் தவிர்ந்த ஏனைய பீடங்கள் அனைத்தும் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளன.

புதிய பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக அனைத்து கற்பித்தல் அறைகளையும் இரவு 9 மணிக்கு பின்னர் மூடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் நேற்றிரவு பல்கலைக்கழக மாணவர்களுக்கும் பாதுகாப்பு பிரிவினருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து வைத்திய பீடம் தவிர்ந்த ஏனைய பீடங்கள் அனைத்தும் மறுஅறிவித்தல் வரை மூட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன் மருத்துவ பீட மாணவர்களை தவிர்ந்த ஏனைய அனைத்து பீடங்களில் மாணவர்களையும் இன்று நண்பகலுக்கு முன்னதாக விடுதிகளிலிருந்து வௌியேறுமாறும் பல்கலைக்கழக நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

Share:

Author: theneeweb