றிசாத் மற்றும் அசாத் சாலிக்கு எதிராக இரண்டு முறைப்பாடுகள்!

அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கும், மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலிக்கும் எதிராக காவல்துறை தலைமையகத்தில் இன்றைய தினமும் இரண்டு முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பௌத்த தகவல் கேந்திர நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரான அங்குலுகல்லே சிறி ஜினாநந்த தேரரினால், அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு எதிராக முறைப்பாடு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

றிசாத் பதியுதீனுக்கு சொந்தமான சொத்துகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு குறித்து முறைப்பாட்டில் அவர் கோரியுள்ளனர்.

இதேநேரம், புதிய சிங்கள தேசிய அமைப்பின் தலைவர் டேன் ப்ரயசாத்தினால், மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலிக்கு எதிராக முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

அத்துரலிய ரத்தன தேரருக்கு எதிராக கருத்து வெளியிட்டமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கோரி குறித்து மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக டேன் ப்ரயசாத் தெரிவித்துள்ளார்.

Share:

Author: theneeweb