மீண்டும் திறக்கப்படவுள்ள பல்கலைப்பீடங்கள்..

களனி பல்கலைக்கழகத்தில் மூடப்பட்டுள்ள மருத்துவ பீடத்தினை தவிர்ந்த ஏனைய பீடங்கள் எதிர்வரும் 3 ஆம் திகதி திங்கட்கிழமை திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

களனி பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு நடவடிகைகளில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு தரப்பினருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலையடுத்து மருத்துவ பீடத்தினை தவிர்ந்த ஏனைய பீடங்கள் மறுஅறிவித்தல் வரை மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் வணிக மற்றும் முகாமைத்துவம், விஞ்ஞான, கணினி மற்றும் தொழிநுட்ப பீடம் எதிர்வரும் 3 ஆம் திகதி கல்வி நடவடிக்கைகளுக்காக திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Author: theneeweb