கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் ஊற்றுப்புலத்தைச் சேர்ந்த 19 வயது இரு இளைஞர்கள் பலி

கிளிநொச்சி இரணைமடு ஏ9 வீதியில் இன்று(01) இடம்பெற்ற வீதி விபத்தில் ஊற்றுப்புலம் கிராமத்தைச் சேர்ந்த இரு இளைஞர்கள் பலியாகியுள்ளனர்.

மாலை ஆடைத் தொழிற்சாலையிலிருந்து உந்துருளியில் கிளிநொச்சி நோக்கி பயணித்தவர்கள் வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பேரூந்தின் பின் பகுதியில் மோதுண்டு இறந்துள்ளனர்.

இச்சம்பவத்தில் கிளிநொச்சி ஊற்றுப்புலத்தைச் சேர்ந்த குமார் டனுசன் மற்றும் கந்தசாமி கஜானன் ஆகிய 19 இளைஞர்களே உயிரிழந்துள்ளனர்.

சடலம் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது மேலதிக விசாரணைகைளை பொலீஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share:

Author: theneeweb