பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரனும் உண்ணாவிரதப் போராட்டம்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ண தேரர் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் விதத்தில் தான் போராட்டத்தை ஆரம்பித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் கூறினார்.

மட்டக்களப்பு காந்தி பூங்காவுக்கு முன்னால் அவர் இன்று காலை தனது போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

இந்த உண்ணாவிரதப் பேராட்டம் சுழற்சி முறையில் தொடர்ந்து இடம்பெறும் என்று அவர் கூறியுள்ளார்.

Share:

Author: theneeweb