சஹ்ரானால் பாதிக்கப்பட்ட ஏ.எம். மிசாஃபீர் வெளியிட்டுள்ள தகவல்

சஹ்ரானுடன் இணைந்து தம்மை தாக்கிய தேசிய தௌஹீத் ஜமாத் உறுப்பினர்கள் சிலர் இன்னும் சுதந்திரமாக நடமாடுவதாக 2017ம் ஆண்டு தாக்குதலுக்கு உள்ளான ஏ.எம். மிசாஃபீர் என்பர் தெரிவித்துள்ளார்.

சூரியன் செய்திப்பிரிவுடன் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலில் அவர் இந்த தகவலை வழங்கினார்.

பயங்கரவாத தாக்குதல் நடத்திய சஹ்ரான் தலைமையிலான தேசிய தௌஹீத் ஜமாத்தினால், 2017ம் ஆண்டு காத்தான்குடியில் சுஃபி இன முஸ்லிம்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தப்பட்டது.

2017ம் ஆண்டே தேசிய தௌஹீத் ஜமாத், ஜிஹாத்தை பிரகடனப்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அன்றைய தாக்குதலை அடுத்து கைது செய்யப்பட்டிருந்த 9 பேரில், சிலரை காத்தான்குடியில் தாம் கண்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதேநேரம் சஹ்ரானின் இந்த பயங்கரவாத செயல்களுக்கு எதிராக 2017ம் ஆண்டு நடத்தப்பட்ட போராட்டம், சுஃபி முஸ்லிம்களால் மாத்திரமே நடத்தப்பட்டது என்றும் அவர் கூறினார்.

Share:

Author: theneeweb