கோடிக்கணக்கான தங்க ஆபரணங்களுடன் சிக்கிய பணிப்பெண்!!

தங்க ஆபரணங்களை சட்டவிரோதமாக விமான நிலையத்தில் இருந்து வெளியில் கொண்டு செல்ல முற்பட்ட பெண்ணொருவரை விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர், விமான நிலையத்தில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த பெண்ணொருவர் என எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இடம்பெயர்வு பயணிகள் முனையத்தில் பயணி ஒருவரின் தங்க ஆபரணங்கள் இந்த பெண்ணுக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், அவர் அவற்றை சூட்சுமமாக விமான நிலையத்திற்கு வெளியே கொண்டு செல்ல முயற்சித்த வேளை பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

அவரிடமிருந்து 2 கிலோ 187 கிராம் எடையுடைய தங்க சங்கலிகள், வளையல்கள், மோதிரம், காதணி உள்ளிட்ட ஆபரணங்கள் மீட்கப்பட்டுள்ளன.

அவற்றின் பெறுமதி ஒரு கோடியே 15 லட்சம் ரூபாய் என தெரியவந்துள்ளது.

குறித்த பெண் நீண்ட காலமாக இந்த மோசடியில் ஈடுபட்டிருக்கலாம் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் விமான நிலைய சுங்க பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.

Share:

Author: theneeweb