திரையரங்கில் வெளியாகாமல் நேரடியாக இணையத்தில் வெளியாகும் தமிழ்ப்படம்!

கிருமி, விக்ரம் வேதா, பரியேறும் பெருமாள் படங்களில் நடித்துக் கவனம் பெற்றுள்ள நடிகர் கதிர் நடித்துள்ள படம் – சிகை. டிவைன் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் ஜெகதீசன் சுப்பு இயக்கியுள்ளார்.

இந்தப் படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக இணையத்தில் வெளியாகவுள்ளது. வீடியோ ஸ்ட்ரீமிங் முறையில் ஜீ5 செயலியில் சிகை படம் பொங்கல் தினத்தன்று வெளியாகவுள்ளது. zee5.com என்கிற இணையத்தளத்திலும் காணமுடியும்.

வீடியோ ஸ்ட்ரீமிங் மூலமாகப் படங்கள் மற்றும் இணையத் தொடர்களைப் பார்க்க வசதியை ஏற்படுத்தித் தருகிறன்றன அமேஸான் பிரைம், நெட்ஃபிளிக்ஸ், ஜீ5 போன்ற செயலிகள். இதற்கென தனிக்கட்டணங்கள் உண்டு. டெஸ்க்டாப் கணினி, ஸ்மார்ட்போன், டேப்ளெட் பிசி போன்றவற்றைப் பயன்படுத்தி விடியோக்களைக் காணமுடியும்.

Share:

Author: theneeweb