காரைதீவு பிரதேச சபை தவிசாளரின் மனைவி விளக்குமாறு கொண்டு தாக்குதல் முயற்சியில்

காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறிலின் மனைவி விளக்குமாறு கொண்டு ரெலோ முக்கியஸ்தர் ஒருவரை நேற்று முன் தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை தாக்க முற்பட்டதால் காரைதீவில் பரபரப்பு ஏற்பட்டது.

கடந்த உள்ளூராட்சி தேர்தலில் காரைதீவு பிரதேச சபையை தமிழ் தேசிய கூட்டமைப்பு கைப்பற்றுவதற்கு முன்னின்று பெரிதும் உழைத்த கோடீஸ்வரன் எம்.பியின் இணைப்பாளரையே கணவரை எதிர்த்து கேள்வி கேட்க கூடாது என்று சொல்லி இவர் தாக்க முற்பட்டார்.
முன்னதாக காரைதீவின் மூத்த பிரஜைகளில் ஒருவரான வயோதிப பெண் ஒருவரின் இறுதி கிரியையில் தவிசாளரும், ரெலோ முக்கியஸ்தரும் பங்கேற்றனர். இன நல்லிணக்கத்துக்கு விரோதமாக முறையில் சகோதர முஸ்லிம் இன மக்களுடன் விரிசலை ஏற்படுத்துகின்ற வகையில் ஏன் நடந்து கொள்கின்றீர்? என்பதாக தவிசாளரை ரெலோ முக்கியஸ்தர் மயானத்தில் வைத்து வினவினார்.
 இதனால் இருவருக்கும் இடையில் நீடித்த தர்க்கம் ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக தவிசாளர் கொட்டான் தடியுடன், தவிசாளரின் மனைவி விளக்குமாறுடனும் அவர்களின் வீட்டு வாசலில் காத்து நின்றனர். ரெலோ முக்கியஸ்தர் அலுவலக மோட்டார் சைக்கிளில் மயானத்தில் இருந்து திரும்பி வந்தபோது வழி மறித்தனர்.
ஆயினும் ரெலோ முக்கியஸ்தர் சாணக்கியமாக அவ்விடத்தில் இருந்து விலகி சென்றார். இறுதி கிரியையில் பங்கேற்று திரும்பி கொண்டிருந்த காரைதீவு பிரதேச சபை உறுப்பினர்கள் அடங்கலாக பொதுமக்கள் பலரும் சம்பவத்தை நேரில் கண்டனர்.
பிற்பாடு ரெலோ முக்கியஸ்தரின் வீட்டுக்கு காரைதீவு பிரதேச சபை தவிசாளர் மோட்டார் சைக்கிள்தாரிகள் சிலருடன் சென்று படுகொலை அச்சுறுத்தல் மேற்கொண்டார் என்றும் ரெலோ வட்டாரங்கள் எமக்கு தெரிவித்தன.
Share:

Author: theneeweb