ஜனாதிபதியின் தேசிய மரநடுகை வேலைத்திட்டம் இன்று கிளிநொச்சியிலும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

கிளிநொசச்சி மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் இடம்பெற்ற மாவட்ட நிகழ்வு கண்டாவளை பிரதேச செயலர் பிரிவில் உள்ள விளாவோடை பிரதேசத்தில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், கிளிநொச்சி இராணுவ தலைமையக கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் ரவிப்பிரிய, கிளிநொச்சி முல்லைத்தீவு பிரதி பொலீஸ்மா அதிபர் மகிந்த குணரத்தன,  உள்ளுராட்சி உதவி ஆணையாளர், பிரதேச செயலாளர்கள், திணைக்களங்கள்சார் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Share:

Author: theneeweb