அத்துரலிய ரத்தன தேரர் கண்டி வைத்தியசாலையில் இருந்து வௌியேறினார்

பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரர் தற்போது கண்டி வைத்தியசாலையில் இருந்து வௌியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ரிசாட் பதியுதீன், ஹிஸ்புல்லாஹ் மற்றும் அசாத் சாலி ஆகியோரை பதவி விலகுமாறு கோரி பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரர் 4 நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டிருந்தார்.

நேற்று முன்தினம் ஹிஸ்புல்லாஹ் மற்றும் அசாத் சாலி ஆகியோர் தமது இராஜினாமா கடிதங்களை ஜனாதிபதியிடம் ஒப்படைத்திருந்த நிலையில் அத்துரலிய ரத்தன தேரர் தனது உண்ணாவிரத போராட்டத்தை நிறைவு செய்து கொண்டார்.

இதனை அடுத்து அவர் கண்டி வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் தனது சுய விருப்பின் பேரில் அத்துரலிய ரத்தன தேரர் வைத்தியசாலையை விட்டு வௌியேறியுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Share:

Author: theneeweb