மல்லாகம் நீதிமன்றத்தில் இருந்து தப்பி ஓடிய சந்தேக நபர்

யாழ்ப்பாணத்தில் போதைப் பொருள் குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மல்லாகம் நீதிமன்றத்தில் இருந்து தப்பி ஓடிய சம்பவம் நேற்று (04) மாலை நடைபெற்றது.

பொலிஸாரால் போதைப் பொருள் குற்றச் சாட்டில் கைது செய்யப்பட்ட நிலையில் மல்லாகம் நீதிமன்றத்தில் நேற்று குறித்த நபர் ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளார்.

இதன்போது குறித்த நபரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவானால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த நபர் நீதிமன்றத்தில் இருந்து பொலிஸாரின் பிடியில் இருந்து தப்பி ஒடியுள்ளார்.

இதனை அடுத்து குறித்த சந்தேக நபரை பொலிஸார் தேடி வருகின்றனர். மேலும் தப்பி ஓடிய நபரை கைது செய்ய திறந்த பிடியாணை உத்தரவினை ஒன்றையும் நீதவான் பிறப்பித்துள்ளார்.

Share:

Author: theneeweb