ளிநொச்சியில் ஆனந்தசங்கரியை சந்தித்தார் கனடா தூதுவர்

 

கனடாவின் இலங்கைக்கான தூதுவர் இன்று(05) தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி அவர்களை சந்தித்துள்ளார்.
குறித்த சந்திப்பு இன்று மாலை 6 மணியளவில் கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழர் விடுதலை கூட்டணி அலுவலகத்தில் இடம்பெற்றது.
குறித்த சந்திப்பில் கனடா நாட்டின் இலங்கைக்கான உயர் ஸ்தானிகர் டேவிட் மக்னொன், தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர்நாயகம் வீ.ஆனந்தசங்கரி, கட்சியின் செயலாளர் இரா.சங்கையா மற்றும் அரவிந்தன் உள்ளிட்ட பலர் குறித்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.
இச் சந்திப்பு தொடர்பில் வீ.ஆனந்தங்கரி கருத்து தெரிவிக்கையில்,
இன்றைய சந்திப்பில் தமிழ், இஸ்லாமிய சமூகங்களிற்கிடையில் நல்லிணக்கம் காணப்பட வேண்டும் என்பது தொடர்பில் அவர் கலந்துரையாடியதாக தெரிவித்தார். சிறுபாண்மை சமூகங்களிற்கிடையில் இவ்வாறான ஒற்றுமை காணப்பட வேண்டும் என்பதை அவர் விரும்புவதாகவும் ஊடகங்களிற்கு தெரிவித்தார். இதேவேளை தமிழ் இஸ்லாமியஇனங்களிற்கு இடையில் நல்லிணக்கம், ஒற்றுமை காணப்பட வேண்டும் என்பதனை வீ.ஆனந்தசங்கரி அவர்களும் இன்று ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
Share:

Author: theneeweb