கிளிநொச்சியில் முன்னாள் எம்பி சந்திரகுமாருக்கும் கனடா தூதுவருக்கும் இடையில் சந்திப்பு

இலங்கைக்கான கனடா தூதுவர் டேவிட் மக்னொன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் தலைவருமான முருகேசு சந்திரகுமாரை அவரது அலுவலகத்தில் சந்தித்துள்ளார்.

இச் சந்திப்பு இன்று(06) காலை எட்டு மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இதன் போது சமகால மற்றும் எதிர்கால அரசியல் நிலைமைகள் பற்றி கலந்துரையாடப்பட்டதோடு. உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பின்னரான நாட்டின் நிலைமைகள் பற்றியும் கலந்துரையாடியதாக வும், முக்கியமாக வடக்கில் முதலீடுகளை மேற்கொள்வதன் ஊடாக தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்திக்கொள்வது பற்றியும் பேசியதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

இதன் போது கனடாதூதுவர் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த போது

நான் கிளிநொச்சியில் நிற்பதில் மட்டும் மகிழ்ச்சியடையவில்லை பல நாடுகளின் பிரச்சினைகளை அறிந்து கொண்டவன். அந்த வகையில் வடக்கில் மேலோங்கியுள்ள பிரச்சினைகளையும் புரிந்துகொண்டுள்ளேன். யுத்தத்தின் பின்னரான அரசியல் பொருளாதார நிலைமைகள் தொடர்பிலும் அறிந்துகொண்டுள்ளேன் எனவும் தெரிவித்தார்.

Share:

Author: theneeweb