தாக்குதல்கள் தொடர்பான மனுக்களை விசாரிக்க 7 நீதிபதிகள் கொண்ட குழு

உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டு தாக்குதல்கள் தொடர்பில் பொலிஸ் மா அதிபர் மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள 7 நீதிபதிகள் கொண்ட குழு ஒன்றை பிரதம நீதியரசர் நியமித்துள்ளார்.

குறித்த வழக்கு தொடர்பான மனு இன்று (06) புவனேக அளுவிஹார, சிசிர டி ஆப்று மற்றும் எல்.ரி.பீ தெஹிதெனிய ஆகிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

குறித்த மனுக்கள் தொடர்பான விசாரணை ஜூலை 12 ஆம் திகதி இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Author: theneeweb