முகத்தை முழுமையாக மூடி தலைக்கவசம் அணிவோர் மீது வழக்கு

மோட்டார் சைக்கிளில் முகத்தை முழுமையாக மூடி தலைக்கவசம் அணிவோர் மீது இனி வழக்கு தொடரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையை அடுத்து அவசர கால சட்டம் பிரகடணப்படுத்தப்பட்டது.

இந்நிலையில் அவசர கால சட்டத்தின் கீழ், முகத்தை முழுமையாக மூடி தலைக்கவசம் அணிவோரை கைது செய்து வழக்கு தொடர முடியும் என சட்ட மா அதிபர், பதில் பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

Share:

Author: theneeweb