கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பினால் 1001 துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைப்பு

கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பினரால் ஆயிரத்தொரு துவிச்சக்கர வண்டிகள் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

பிரித்தானியாவை தளமாக கொண்டு இயங்கி வருகின்ற கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பு புலம் பெயர் உறவுகளின் உதவியுடன் இப் பணியை மேற்கொண்டுள்ளனர்.

அதனடிப்படையில் கிளிநொச்சி மாவட்டத்திற்கு 651 துவிச்சக்கர வண்டிகளும், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, திருகோணமலை, மட்டகளப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களுக்கு தலா ஐம்பது துவிச்சக்கர வண்டிகளும் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

கிளிநொச்சி கல்வி வளர்ச்சி அறக்கட்டளை, கிளிநொச்சி மாவட்ட அதிபர்கள் சங்கம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் கிளிநொச்சி மாவட்ட மக்கள் இவ் உதவியை வழங்கி வருகின்றார்கள்.

இன்றை தினம் 08-06-2019 கிளிநொச்சி மத்திய கல்லூரியில் இடம்பெற்ற இந் நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பின் புலம் பெயர் இணைப்பாளர்கள், யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் சத்தியமூர்த்தி, யாழ் பல்கலைகழக பொறியியல் பீட பீடாதிபதி அற்புதராஜா பாடசாலைகளின் அதிபர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர.

Share:

Author: theneeweb