அரசாங்க உத்தியோகத்தர்களின் உடை தொடர்பான சுற்றுநிருபம் திருத்தப்படுகிறது

அரசாங்க உத்தியோகத்தர்களின் உடை கட்டுப்பாடு குறித்து வௌியிடப்பட்ட சுற்றுநிருபத்தை திருத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக அந்த சுற்றுநிருபத்தின் விதிகளை செயல்படுத்த தேவையில்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

பொது நிர்வாக மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டாரவால் குறித்த சுற்றுநிருபம் திருத்துவதற்கான நடவடிக்கை இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க அதிகாரிகளின் ஆடைகள் தொடர்பில் பொது நிர்வாக மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சினால் அண்மையில் வௌியிடப்பட்ட சுற்றுநிருபம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு அவதானம் செலுத்தியிருந்தது

Share:

Author: theneeweb