சட்டவிரோதமாக மின்சாரம் பெற்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கைது

சட்டவிரோதமாக மின்சாரத்தினை தனது வீட்டிற்கு பெற்றிருந்த முன்னாள் வன்னி பாராளுமன்ற உறுப்பினரொருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

மின்சார சபையின் திடீர் பரிசோதனைக்குழு இன்று வவுனியாவில் பல இடங்களிலும் சட்டவிரோதமான முறையில் மின்சாரத்தினை பெறுபவர்கள்  தொடர்பில் சோதனையில் ஈடுபட்டிருந்தாகள்.

இதன்போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரொருவர் தனது வீட்டிற்கு சட்டவிரோதமான முறையில் மின்சாரத்தினை அண்மைக்காலமாக பெற்றுவந்தள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரை கைது செய்த மின்சாரசபையினர் பொலிஸாரிடம் கையளித்து வழக்கு பதிவு செய்திருந்தனர்.

இதனையடுத்து முன்னாள் பாராமன்ற உறுப்பினர் நீதிவானின் முன்னிலையில் ஆஜர்ப்படுத்துவதற்காக தற்போது அழைத்து செல்லப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

Share:

Author: theneeweb