சமூர்த்தி பயனாளிகளுக்கு காட்டப்டப்பட்ட கவர்ச்சி நடனத்திற்கு ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா

கிளிநொச்சி மத்திய கல்லுரி மைதானத்தில் கடந்த 02 ஆம் திகதி இடம்பெற்ற சமுர்த்தி உரித்துச் சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் அரங்கேற்றப்பட்ட கவர்ச்சி நடனத்திற்கு ஒரு இலட்சத்துஐம்பதாயிரம் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த இரண்டாம் திகதி கிளிநொச்சி மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 13078 சமுர்த்தி பயனாளிகளில் உத்தியோகபூர்வமாக 4500 பேருக்கு சமுர்த்தி உரித்துச் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு பெருமெடுப்பில் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இதன் போது சில நடன நிகழ்வுகளும் அரங்கேற்றப்பட்டன. இதி்ல் அரங்கேற்றப்பட்ட கவர்ச்சி நடனம் ஒன்றுக்கே கொடுப்பனவாக ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் வழங்குவதற்கு நிதி செலவு அறிக்கைகளில் கணக்கு காட்டப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வுகளுக்குரிய ஏற்பாட்டுச் செலுவுகளை ஒவ்வொரு வறிய சமுர்த்தி பயனாளிகளிடமிருந்தும் 500 ரூபா அறவிடுமாறும் சுற்றுநிருபம் ஒன்றும் அனுப்பி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share:

Author: theneeweb