தேரரை மிரட்டி பணம் பெற முற்பட்ட மூவரையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவு

தம்புள்ள, ரஜமஹா விகாரையின் விகாரதிபதி வணக்கத்துக்குரிய அம்பகஹவெவ ராகுல தேரரை மிரட்டி 10 கோடி ரூபா பணத்தை பெற்றுக் கொள்ள முற்பட்ட மூன்று சந்தேக நபர்களையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த நபர்களை ஜூன் மாதம் 19 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

வணக்கத்துக்குரிய அம்பகஹவெவ ராகுல தேரரிடம் கடந்த மே மாதம் 20 ஆம் திகதி ஜவாத் அமைப்பு எனும் பெயரில் மிரட்டல் அழைப்பு ஒன்று வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பின்னர் இந்த விடயம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது குறித்த குற்றத்திற்காக பயன்படுத்தப்பட்ட 3 தொலைபேசிகள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

19 வயதுடைய சானக பிரசாத் கருணாரத்ன, 25 வயதுடைய அதுல ஜயசாந்த மற்றும் 34 வயதுடைய மிஹிது குணரத்ன என்பவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தம்புள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share:

Author: theneeweb