முஸ்லிம் உறுப்பினர்களின் அமைச்சுப் பதவி விலகல் கண்துடைப்பு – பந்துல குற்றச்சாட்டு

முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சுப் பொறுப்புகளில் இருந்து விலகி இருந்தாலும், இன்னும் அவர்களுக்கு வழங்கப்பட்ட வாகனங்கள் கையளிக்கப்படவில்லை என்று ஒன்றிணைந்த எதிரணி குற்றம் சுமத்தியுள்ளது.

அதன் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன இதனை கொழும்பில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் வைத்து குறிப்பிட்டார்.

றிசாட் பதியுதீன் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்காக, அனைத்து முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சுப் பொறுப்புகளை துறப்பதாக அறிவித்தனர்.

ஆனால் அவர்கள் தங்களது வாகனங்களை இன்னும் கையளிக்கவில்லை.

அத்துடன் அவர்கள் அமைச்சர்களாக இருந்த போது வழங்கப்பட்ட பாதுகாப்பு இன்னும் குறைக்கப்படவில்லை.

இது ஒரு கண்துடைப்பு நடவடிக்கை மாத்திரமே என்று பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

Share:

Author: theneeweb