இலங்கையர்களை சட்டவிரோதமாக ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்பிய குழு மலேசியாவில் கைது

இலங்கையர்களை சட்டவிரோதமான முறையில் ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்பி வந்த குழு ஒன்று மலேசிய காவற்துறை திணைக்களத்தினால் கண்டுபிடிக்கப்பட்டு, முடக்கப்பட்டுள்ளது.

அந்த நாட்டின் ஊடகம் ஒன்று இதனைத் தெரிவித்துள்ளது.

சட்டவிரோத குடியேறிகளுக்கு உதவி செய்துவந்த 11 பேர் கொண்ட குழு ஒன்றை அந்த நாட்டின் காவற்துறையினர் கடந்த மாதம் கைது செய்திருந்தனர்.

இந்த குழுவினர் கடந்த ஆண்டு மையப்பகுதியில் இருந்து செயற்பட்டு வந்ததாகவும், அவர்கள் இலங்கையர்களை போலி ஆவணங்களுடன் மலேசியாவிற்கு அழைத்து, அங்கிருந்து சட்டவிரோதமாக ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்பி வந்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Share:

Author: theneeweb