விமான நிலையத்தின் பார்வையாளர்கள் மண்டம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வரும் மற்றும் வெளியேறும் வளவு விருந்தினர்களுக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

இதற்கமைவாக ஒரு பயணிக்காக இரண்டு விருந்தினர்கள் இந்த பகுதிக்குள் பிரவேசிக்க முடியும் என்று விமான நிலையம் தெரிவித்துள்ளது.

கடந்த 21 ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தை அடுத்து கட்டுநாயக்க விமான நிலையத்தில் விஷேட பாதுகாப்பு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

வாகனங்கள் விமான நிலைய வளவுக்குள் பிரவேசித்தல் தடை செய்யப்பட்டதுடன் பயணிகள் தவிர்ந்த விருந்தினர்கள் பிரவேசித்தல் மற்றும் வெளியேறும் பகுதிக்குள் பிரவேசிப்பது கட்டுப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share:

Author: theneeweb