றிசாட் பதியுதீன் உள்ளிட்ட நால்வரை கைது செய்யுமாறு கோரி ஆர்ப்பாட்டம்

நாடாளுமன்ற உறுப்பினர்களான றிசாட் பதியுதீன் மற்றும் முஜுபூர் ரஹ்மான் ஆகியோரையும், முன்னாள் ஆளுனர்களான அசாத் சாலி மற்றும் எம்.எல்.எ.எம். ஹிஸ்புல்லா ஆகியோரையும் கைது செய்யுமாறு வலியுறுத்தி தங்கொட்டுவ நகரில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது.

தேசிய சுதந்திர முன்னணியினால் இந்த ஆர்ப்பாட்டம் ஒழுங்க செய்யப்பட்டிருந்தது.

இதேவேளை, எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, காத்தான்குடி பிரதேச முஸ்லிம்கள் மத்தியில் வெளியிட்ட கருத்து ஒன்றுக்கு எதிராக காவற்துறை தலைமையகத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

பௌத்த தகவல் மையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அங்குனுகல்ல சிறி ஜினாநந்தா தேரர் உள்ளிட்ட சிங்கலே அமைப்பின் உறுப்பினர்கள் இந்த முறைப்பாட்டை பதிவு செய்தனர்.

முறைப்பாட்டை பதிவு செய்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட ஜினாநந்த தேரர், முஸ்லிம்களை தூண்டிவிடும் வகையில் ஹிஸ்புல்லா கருத்து வெளியிட்டிருப்பதாக தெரிவித்தார்.

கடந்த எட்டாம் திகதி காத்தான்குடியில் மக்கள் மத்தியில் உரையாற்றிய ஹிஸ்புல்லா, முஸ்லிம்கள் இலங்கையில் மாத்திரமே சிறுபான்மையாக இருப்பதாகவும், உலகின் ஏனைய பகுதிகளில் பெரும்பான்மையாக இருப்பதாகவும் அதனால் இலகுவாக எம்மை அடக்கிவிட முடியாது என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த கருத்துக்கு எதிராகவே தாங்கள் முறைப்பாட்டை செய்திருப்பதாக ஜினாநந்த தேரர் கூறியுள்ளார்.

Share:

Author: theneeweb