கிளிநொச்சி முச்சக்கர வண்டிகளுக்கு ஸ்ரிக்கர் மற்றும் அடையாள அட்டை

முச்சக்கர வண்டிகளில் பயணிக்கும் பொது மக்களின் நலன் கருதி கிளிநொச்சி மாவட்டத்தில் சேவையில் உள்ள முச்சக்கர வண்டிகளை அடையாளப்படுத்தும் வகையில் ஸ்ரிக்கர் மற்றும் அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு இன்று(11) இடம்பெற்றது.

இன்று காலை பத்து மணிக்கு பெண்கள் சிறுவர் பொலீஸ் பிரிவின் கேட்போர் கூடத்தில் இந் நிகழ்வு இடம்பெற்றது.

கிளிநொச்சி மாவட்டத்தில் சேவையில் உள்ள 400 க்கு மேற்பட்ட முச்சக்கர வண்டிகளுக்கும் அவர்களின் பொலீஸ் பிரிவின் அடிப்படையில் ஸ்ரி்க்கர்கள் வண்டியின் முன் புறமும் பின்புறமும் ஒட்டப்பட்டுள்ளது. அதில் பொலீஸ் நிலையத்தின் தொலைபுசி இலக்கம், மாவட்ட முச்சக்கர உரிமையாளர் சங்கததின் தொலைபேசி என்பவற்றோடு, ஒவ்வொரு முச்சக்கர வண்டிக்கும் தொடர் இலக்கமும் அச்சிடப்பட்டுள்ளது.

. எனவே பொது மக்கள் தங்களின் பாதுகாப்பு மற்றும் சௌகரியமான பயணங்களுக்கு இந்த ஸ்ரிக்கர் ஒட்டப்பட்ட முச்சக்கர வண்டிகளை பயன்படுத்துமாறும் முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கம் கோரியுள்ளது.

இன்றைய தினம் நூறு வரையான முச்சக்கர வ்ண்டி உரிமையாளர்களுக்கு ஆரம்ப நிகழ்வாக வழங்கி வைக்கப்பட்டது. தொடர்ந்தும் ஏனையவர்களும் வழங்கப்படவுள்ளது.

இந்த நிகழ்வில் கிளிநொச்சி சிரேஸ்ட பொலீஸ் அதிகாரி உதவிபொலீஸ் அதிகாரி பொலீஸ் நிலையங்களின் பொலீஸ் அதிகாரிகள் முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்

Share:

Author: theneeweb