சுற்றலாத்துறையை ஊக்குவிக்க விஷேட சலுகை

தற்போது இலங்கையின் சுற்றலாத்துறையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதனால் அதனை ஊக்குவிப்பதற்காக ரஷ்யா போன்ற பிரதான சில நாடுகள் விஷேட சலுகைகளை வழங்கி வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

பிரதான ஹோட்டல்களில் விஷேட விலை சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் ரொய்டர்ஸ் செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

அத்துடன் வெளிநாட்டவர்களை ஊக்குவிப்பதற்காக விஷேட விளையாட்டு நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தீவிரவாத தாக்குதல் ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் 1000 சுற்றுலா பயணிகள் வருகை தந்ததாகவும் தற்போது 1400 இற்கும் 1500 இற்கும் இடைப்பட்ட அளவான சுற்றுலாப்பயணிகள் வருகை தருவதாகவும் கிஸு கோமஸ் தெரிவித்திருந்தார்.

எவ்வாறாயினும் சீனா, இந்தியா போன்ற நாடுகள் இலங்கை வர விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கியதனால் இவ்வாறு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இருப்பினும் தாக்குதலுக்கு முன்னர் சுமார் 4500 சுற்றுலா பயணிகள் வருகை தந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Share:

Author: theneeweb