ஆளு­நர்கள், அமைச்­சர்­களின் பத­வி­ வி­ல­கல்கள் பிக்­கு­மாரும் சட்­டமும் . கலாநிதி அமீர் அலி

இரு முஸ்லிம் ஆளு­நர்­களும் சகல முஸ்லிம் அமைச்­சர்­களும் பிரதி அமைச்­சர்­களும் கூண்­டோடு பத­வி­வி­ல­கி­யமை இலங்கை ஜன­நா­ய­கத்­தி­னதும் முஸ்லிம் அர­சி­ய­லி­னதும் வர­லாற்றில் முன்­னொ­ரு­போ­து­மில்­லாத வகை­யி­லான ஒரு அர­சியல் நட­வ­டிக்­கை­யாகும். சில செய்­திகள் கூறு­வ­தைப்­போன்று, அவர்கள் இன்­னமும் தங்­க­ளது  சிறப்­பு­ரி­மை­க­ளையும் தனிச்­ச­லு­கை­க­ளையும் கைவி­ட­வில்­லை­யானால், பத­வி­வி­லகல்  நேர்­மை­யான ஒரு நட­வ­டிக்கை என்­பதை நிரூ­பிப்­ப­தற்­காக அவற்றை உட­ன­டி­யாக துறந்­து­வி­ட­வேண்டும்.இரு முஸ்லிம் மாகாண ஆளு­நர்­களும் ஒரு அமைச்­சரும் பத­வி­நீக்­கப்­ப­டவேண்­டு­மென்ற கோரிக்­கையை முன­்வைத்து ஒரு பிக்கு தொடங்­கிய  சாகும்­வரை உண்­ணா­வி­ர­தப் ­போ­ராட்­டமும் இன்­னொரு பிக்கு முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக முன்­னெ­டுத்த குரோதப் பிர­சா­ரமும் நாட­ளா­விய ரீதியில் முஸ்லிம் சமூ­கத்­திற்கு எதி­ராக கல­வ­ரங்­களைத் தூண்­டி­வி­டக்­கூ­டிய சாத்­தி­யத்தை  தடுப்­ப­தற்கே இந்த பத­வி­வி­ல­கல்கள் என்­பது மாத்­தி­ரமே ஏற்­றுக்­கொள்­ளக்­கூ­டிய ஒரே கார­ண­மாகும். இப்­போது இன்­னொரு குழு உயர்­மட்ட பிக்­குமார் பத­விப்­பொ­றுப்­புக்­களை  மீண்டும் ஏற்­றுக்­கொண்டு நாட்­டுக்கு சேவை­செய்­யு­மாறு முஸ்லிம் அமைச்­சர்­க­ளிடம் வேண்­டுகோள் விடுத்­தி­ருக்­கி­றார்கள். பிக்­கு­மா­ருக்கும் அமைச்­சர்­க­ளுக்கும் இடையில் நாட்டின் சட்டம் விடு­மு­றையில் சென்­று­விட்­டது போலத் தோன்­று­கி­றது.

தங்­க­ளது சமூ­கத்தின் பாது­காப்­பிலும் பத்­தி­ரத்­திலும் நல்­வாழ்­விலும் முஸ்லிம் அமைச்­சர்­க­ளுக்கும் ஆளு­நர்­க­ளுக்கும் கருத்­தூன்­றிய அக்­கறை இருந்­தி­ருந்தால், முன்­னைய அர­சாங்­கத்தின் காலத்தில் அளுத்­க­ம­விலும் தற்­போ­தைய அர­சாங்­கத்தின் கீழ் திக­ன­விலும் இடம்­பெற்ற கல­வ­ரங்­க­ளை­ய­டுத்து உட­ன­டி­யாகப் பத­வி­வி­ல­கி­யி­ருக்­க­வேண்டும். இப்­போது பதவி வில­கி­யி­ருக்கும் அமைச்­சர்­களில் ஒருவர் முன்­னைய அர­சாங்­கத்தில் நீதி­ய­மைச்­ச­ராக பத­வி­வ­கித்­தவர். அப்­போது அவரும் சகாக்­களும் ஏன் பத­வி­வி­ல­க­வில்லை என்­பதும் இப்­போது ஏன் பதவி வில­கி­னார்கள் என்­பதும் நம்­ப­க­மான விடை­களை வேண்­டி­நிற்கும் கேள்­வி­க­ளாகும்.முன்­னைய அர­சாங்­கத்தில் எந்­த­வொரு முஸ்லிம் அமைச்­ச­ருக்கும் ஆளு­ந­ருக்கும் எதி­ராக சட்­ட­வி­ரோத அல்­லது ஊழல்­த­ன­மான நடத்தை எதிலும் ஈடு­பட்­ட­தாக குற்­றஞ்­சாட்­டப்­ப­ட­வில்லை. இப்­போது அவர்­களில் மூவர் குற்­றச்­சாட்­டு­களை எதிர்­நோக்­கு­கி­றார்கள்.  இந்த வேறு­பாடு அதி­கா­ரப்­ப­த­வி­களில் உள்ள சகல முஸ்­லிம்­களும் குற்­றச்­சாட்­டுக்­களை எதிர்­நோக்­கு­கின்ற மூவ­ரையும் பாது­காக்க முயற்­சிக்­கின்­றார்கள் என்று குறிப்­பிட்ட சில வட்­டா­ரங்­க­ளினால் தெரி­விக்­கப்­ப­டு­கின்ற கருத்தை சார­மு­டை­ய­தாக்­கு­கி­றது.

எது எவ்­வா­றி­ருந்­தாலும், குற்­றச்­சாட்­டுகள் நிரூ­பிக்­கப்­பட்ட மெய்ம்­மைகள் அல்ல. அந்த குற்­றச்­சாட்­டுகள் நம்­ப­கத்­தன்­மை­யான திண்­ணிய சான்­று­க­ளினால் ஆதா­ரப்­ப­டுத்­தப்­ப­ட­வேண்டும்; சட்­ட­ந­ட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டக்­கூ­டி­ய­தாக  அவை நீதி­மன்­றங்­களில் சமர்ப்­பிக்­கப்­ப­ட­வேண்டும்; குற்­றஞ்­சாட்­டப்­பட்­ட­வர்கள் நீதி­வி­சா­ர­ணைக்கு முகங்­கொ­டுக்­க­வேண்டும். மாறாக, யார்  குற்­ற­வாளி, யார் குற்­ற­மற்­றவர் என்று பிக்­குமார் தீர்­மா­னிக்­கப்­போ­கின்­றார்கள் என்றால், எதற்­காக சட்­டங்கள்? எதற்­காக நீதி­மன்­றங்கள்? எதற்­காக நீதி­ப­திகள்?

வெளி­நாட்டுத் தலை­யீட்­டுக்­கான சாத்­தியம் மற்றும் பொரு­ளா­தார சீர்­கு­லைவு குறித்து மகா­நா­யக்க தேரர்கள் உண்­மை­யி­லேயே கவ­லை­கொண்­டி­ருக்­கி­றார்கள் என்றால்,  பொரு­ளா­தா­ரத்தைப் பற்றி எந்­த­வித அக்­க­றையும் இல்­லாமல் வன்­முறைக் குழப்­பங்­களை விளை­விப்­பதில் வரிந்­து­கட்­டிக்­கொண்டு நிற்கும் சில பிக்­கு­மாரின் செயற்­பா­டு­களை ஏன் அவர்கள் பகி­ரங்­க­மாகக் கண்­டிருக்­க­வில்லை. தேசத்­தி­னதும் பௌத்­த­ம­தத்­தி­னதும் நலன்­க­ளுக்­காக மகா­சங்­கத்தில் இருந்து விரும்­பத்­த­காத பிர­கி­ரு­தி­களை மகா­நா­யக்க தேரர்கள் களை­யெ­டுக்­க­வேண்டும். பௌத்த பிக்­கு­மாரில் கீர்த்­தி­மிக்­க­வர்கள் எத்­த­னையோ பேர் இருந்­தி­ருக்­கி­றார்கள். உதா­ர­ணத்­துக்கு சொல்­வ­தானால் வண. வெலி­விற்ற சர­ணங்­கர தேரர், வண.வல்­பொல ராகுல தேரர், மாது­ளு­வாவே சோபித தேரர் போன்­ற­வர்­களை நாம் மறத்­த­லா­காது. அவர்­களைப் போன்ற பல பிக்­குமார் இப்­போதும் இருக்­கி­றார்கள். அவர்கள் வெளியில் வந்து அறி­வற்­ற­வர்­க­ளி­னதும் பழி­பா­வத்­துக்கு அஞ்­சாத பேர்­வ­ழி­க­ளி­னதும்  ஆட்­சியை நோக்கி நாடு செல்­வதைத் தடுக்­க­வேண்டும்.

சட்­டத்­துக்கு மேலாக எவரும் இல்லை.ஜனா­தி­ப­தியும் கூட.பதவி வில­கி­ய­வர்கள் பௌத்த குருமார் வேண்­டுகோள் விடுக்­கி­றார்கள் என்­ப­தற்­காக  தங்கள் பொறுப்­புக்ளை மீண்டும் இப்­போது ஏற்­ப­தானால், குற்­றச்­சாட்­டுகள் தொடர்­பான விசா­ர­ணை­களில் தலை­யீடு செய்­வ­தாக குற்­றஞ்­சாட்­டப்­ப­டு­கின்ற நிலையில் பத­வி­களில் தொட­ரு­வ­தற்கு தாங்கள் விரும்­ப­வில்லை என்ற அமைச்­சர்­களில் ஒரு­வரின் முந்­திய வாதம் அதன் நம்­ப­கத்­தன்­மையை இழந்­து­வி­டு­கி­றது. அவர்கள் குற்­ற­வியல் விசா­ரணை பிரி­வி­னரால்  (சி.ஐ.டி.) விசா­ரணை நடத்­தப்­ப­ட­வேண்டும் என்று கோரிக்கை விடுத்­த­துடன் ஒரு மாத­கால அவ­கா­சமும் கொடுத்­தி­ருந்­தார்கள். அது உண்­மை­யி­லேயே ஒரு பெறு­ம­தி­யான யோச­னை­யாகும்.

அவர்­களில் எந்­த­வொ­ரு­வ­ருக்கும் அல்­லது பல­ருக்கும்  எதி­ராக நம்­ப­கத்­தன்­மை­யான சான்­று­களை சி.ஐ.டி.கண்­டு­பி­டித்தால் அவர்­களை சட்­டத்தின் முன் நிறுத்­த­வேண்டும் ; குற்­ற­வாளி என்று நிரூ­பிக்­கப்­பட்டால் தண்­டனை வழங்­கப்­ப­ட­வேண்டும்.மிக அண்­மையில் அதுவும் நல்­லாட்சி அர­சாங்­கத்தின் கீழ் சட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்தும் பிரி­வினர் கேலிக்­கி­ட­மா­ன­வர்­க­ளாக்­கப்­பட்­டதை கண்டோம். உதா­ர­ணத்­துக்கு கூறு­வ­தானால் பொது­பல சேனாவின் பொதுச்­செ­ய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரரின் விவ­கா­ரத்தை எடுத்­துக்­கொள்வோம்.நீதி­மன்­றத்தை அவ­ம­தித்­த­தாக குற்­ற­வா­ளி­யாகக் காணப்­பட்டு அவர் சிறைக்கு அனுப்­பப்­பட்­டி­ருந்தார். முன்னர் கிரா­ம­சே­வ­க­ராக இருந்த ஒரு ஜனா­தி­ப­திக்கு ஞான­சார செய்த குற்­றத்தின் பார­தூ­ரத்­தன்மை பற்றி எதுவும் தெரி­யாமல் போய்­விட்­டதே.

நீதித்­து­றை­யி­ட­மி­ருந்து எந்­த­வி­த­மான ஆலோ­ச­னை­யையும் கேட்­காமல் ஜனா­தி­பதி அவ­ருக்கு மன்­னிப்பு அளித்து சிறை­யி­லி­ருந்து விடு­தலை செய்தார். விடு­த­லை­யான மூன்று நாட்­க­ளுக்­குள்­ளாக  அந்த பிக்கு தனது இன­வெறி நஞ்சைக் கக்­கு­வ­தற்­காக வீதியில் இறங்­கி­யதைக் கண்டோம். தனது கோரிக்­கைகள் நிறை­வேற்­றப்­ப­டா­விட்டால் ஆட்­சியைக் கவிழ்க்­கப்­போ­வ­தாக அவர் அச்­சு­றுத்­தினார். அதே­போன்றே, இன­வாத வன்­செ­யல்­களைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்கு அர­சாங்கம் அவ­ச­ர­கா­ல­ நி­லையைப் பிர­க­ட­னப்­ப­டுத்­தி­ய­துடன் ஊர­டங்குச் சட்­டத்­தையும் பிறப்­பித்­தது. ஆனால், அந்த அவ­ச­ர­கா­ல­நி­லையும் ஊர­டங்குச் சட்­டமும்  ஆர்ப்­பாட்­டங்­க­ளையும் வன்­மு­றை­யையும் தூண்­டி­வி­டு­கின்ற காவி­யு­டைக்­கா­ரர்­களைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­கான அதி­கா­ரத்தைக் கொண்­டி­ருக்­க­வில்லை என்றே தோன்­று­கி­றது.ஊர­டங்கு வேளையில் காடை­யர்கள் வீதி­களில் சுதந்­தி­ர­மாகத் திரிந்து வர்த்­தக நிலை­யங்­களைச் சூறை­யா­டி­ய­தையும் சொத்­துக்­களை நிர்­மூ­லஞ்­செய்­த­தையும் எவ்­வாறு விளங்­கிக்­கொள்­வது? அவர்­களில் சிலர் கைது­செய்­யப்­பட்­டார்கள்.ஆனால், எந்த நீதி­வி­சா­ர­ணை­யு­மின்றி அவர்கள் விடு­விக்­கப்­பட்­டு­விட்­டார்கள்.தற்­ச­மயம் நாட்டில் சட்டம் ஒழுங்கு நிலை­வரம்  எந்­த­ள­வுக்கு மோச­மான நிலையில் இருக்­கி­றது என்­பதை காண்­பிப்­ப­தற்கு இவற்றை விடவும் வேறு சம்­ப­வங்கள் தேவையா?

பதவி வில­கிய அமைச்­சர்­களும் பிர­தி­ய­மைச்­சர்­களும் தங்­க­ளது அந்த நட­வ­டிக்­கையின் விளை­வாக அனு­கூ­ல­மான ஏதா­வது நடக்க வேண்டும் என்று விரும்­பினால், தங்­க­ளது சிறப்­பு­ரி­மை­க­ளையும் தனிச்­ச­லு­கை­க­ளையும் தூக்­கி­யெ­றிந்­து­விட்டு, சட்டம் அதன் வேலையைச் செய்­வ­தற்கு அனு­ம­தித்து பாரா­ளு­மன்­றத்தில் பின்­வ­ரி­சையில் அம­ர­வேண்டும். நாட்டின் நீதித்துறையின் சுதந்திரத்துக்கு அவர்களால் செய்யக்கூடிய நீண்டகால பங்களிப்பாக அதுவே அமையட்டும்.

கலாநிதி அமீர் அலி  . Virakesari

Share:

Author: theneeweb