பயங்கரவாத தாக்குதலின் பின்னர் இன்று மீண்டும் திறக்கப்பட்ட கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயம்

உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டு தாக்குதலின் பின்னர் மூடப்பட்டிருந்த கொட்டாஞ்சேனை – கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயம் புனர்நிர்மாணங்களின் பின்னர் இன்றைய தினம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாத தாக்குதல்களின் பின்னர் 52 நாட்கள் கடந்தே கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயம் திறக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்பிரல் 21 ஆம் திகதியான உயிர்த்த ஞாயிறு அன்று கொச்சிக்கடை தேவாலயத்துடன், நீர்கொழும்பு கட்டுவாபிட்டிய தேவாலயம், மட்டக்களப்பு சியோன் தேவாலயம், சங்ரில்லா, சினமன் கிரேண்ட் மற்றும் கிங்ஸ்பேரி ஆகிய நட்சத்திர விருந்தங்களிலும் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதல்களில் இரு நூறுக்கும் மேற்பட்டோர் பலியானதுடன், மேலும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.

இந்த தாக்குதலில் பலத்த சேதத்திற்கு உள்ளான கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயம் அன்று முதல் மூடப்பட்டு புனர்நிர்மாண பணிகள் இடம்பெற்று வந்த நிலையில், இன்றைய தினம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share:

Author: theneeweb