விரைவில் நல்ல பதிலை வெளியிடுவோம் – ராவூப் ஹக்கீம்HiruNews

மஹாநாயக்க தேரர்களின் கோரிக்கைகளுக்கு அமைய மீண்டும் பதவிகளை பொறுப்பேற்பது தொடர்பில் துரிதமாக நல்ல பதிலை வெளியிடவுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர், முன்னாள் அமைச்சர் ராவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளர்.

அமைச்சர் பதவிகளில் இருந்து விலகிய முன்னாள் முஸ்லிம் அமைச்சர்கள் நேற்றைய தினம் மஹாநாயக்க தேரர்களை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே ராவூப் ஹக்கீம் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாளைய தினம் வெளிநாட்டு இராஜதந்திரிகள் சிலரை சந்திக்க உள்ளனர்.

இந்திய உயர்ஸ்தானிகர் தரஞ்சித் சிங் சந்து, அமெரிக்க தூதுவர் அலைனா பி ரெப்லிஸ் மற்றும் சீன தூதுவர் சென் ஸியுவான் ஆகியோருடன் இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் எமது செய்தி சேவையிடம் இதனைத் தெரிவித்துள்ளார்.

Share:

Author: theneeweb