ரிஷாட், அசாத் மற்றும் ஹிஸ்புல்லாவிற்கு எதிராக 21 முறைப்பாடுகள்

தமது பதவிகளில் இருந்து விலகிய ரிஷாட் பதியூதீன், அசாத் சாலி மற்றும் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா ஆகியோருக்கு எதிரான முறைப்பாடுகளை ஒப்படைப்பதற்காக நியமிக்கப்பட்ட விசேட குழுவில் முறைப்பாடுகளை சமர்ப்பிக்கும் காலம் இன்று மாலை 4.00 மணியுடன் நிறைவடைந்துள்ளது.

இதற்கமைய இன்று மாலை 3.00 மணி ஆகும் போது குறித்த மூவருக்கும் எதிராக மொத்தமாக 21 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர், காவல்துறை அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் ஒருவர் மற்றும் காவல்துறை அத்தியட்சகர் இருவர் அடங்கிய இந்த குழுவில் வழங்கப்படும் முறைப்பாடுகள் குறித்த விசாரணைகளை குற்றப்புலனாய்வு திணைக்களம் மேற்கொண்டு வருகிறது.

இதற்கமைய முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனுக்கு எதிராக 11 முறைப்பாடுகளும், மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலிக்கு எதிராக 5 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.

அதனுடன் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாவிற்கு எதிராக 2 முறைப்பாடுகளும், ரிஷாட் பதியூதீன் மற்றும் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாவிற்கு எதிராக மேலும் ஒரு முறைப்பாடும் வழங்கப்பட்டுள்ளன.

இதனுடன் அவர்கள் மூன்று பேருக்கு எதிராக இரண்டு முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாக காவல்துறை பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Share:

Author: theneeweb