ஹட்டன் – யுனிபீல்ட்: பெற்ற பிள்ளையை உயிருடன் புதைத்த தாய்!!

பிறந்து 28 தினங்களேயான கைக்குழந்தையொன்றை உயிருடன் புதைத்த பெண்ணொருவர் ஹட்டனில் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

28 வயதான குறித்த பெண், ஹட்டன் – யுனிபீல்ட் தோட்டத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பெண், குழந்தைக்கு தாய்ப்பாலை கொடுத்து உறங்கவைத்து, பின்னர் வீட்டுத் தோட்டத்தில் குப்பைகளை புதைப்பதற்காக வெட்டப்பட்டிருந்த குழியில் குழந்தையை இட்டு மண்ணால் மூடியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதையடுத்து, உறவினர்கள் குழந்தை தொடர்பில் வினவியபோது, வீட்டுத் தோட்டத்தில் புதைத்துவிட்டதாக குறித்த பெண் கூறியுள்ளார்.

இதனையடுத்து, உறவினர்களால் மீட்கப்பட்ட குழந்தை, தாய்ப்பால் அருந்தும்போது உயிரிழந்ததாக கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

சந்தேகத்திற்குரிய பெண் இதன்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எவ்வாறெனினும், குழந்தையின் கழுத்துப்பகுதியில் மண் படர்ந்திருந்திருந்ததை அவதானித்த மருத்துவமனை அதிகாரிகள், காவல்துறையினரை அழைத்து சந்தேகத்திற்குரிய பெண்ணிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

இதன்போது, குறித்த பெண் 28 நாட்களேயான தமது குழந்தையை நிலத்தில் புதைத்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.

கணவருடன் ஏற்பட்ட முரண்பாட்டினாலேயே குழந்தையை புதைத்ததாக குறித்த பெண் தெரிவித்துள்ளார்.

இந்த கொலைக்கு உதவியளித்தார் என்ற குற்றச்சாட்டில் சந்தேகத்திற்குரிய பெண்ணின் தாயும் கைதுசெய்யப்பட்டுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Share:

Author: theneeweb