முஸ்லிம்கள் பாரபட்சமாக நடத்தப்படுவது கண்டனத்துக்குரியது – மனித உரிமைகள் ஆணைக்குழு

நாட்டின் சில இடங்களில் முஸ்லிம்கள் பாரபட்சமாக நடத்தப்படுவதாகவும், அது மிகவும் கண்டனத்துக்கு உரியது என்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 21 தாக்குதலை அடுத்து நாட்டில் அச்சமான சூழ்நிலை உருவாகியுள்ளது.

இதனை மையமாக வைத்து, நாட்டின் சில பாகங்களில் பொது இடங்களில் முஸ்லிம் வர்த்தகர்கள் தங்களது வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுக்க சில உள்ளுராட்சி சபைகள் தடைவிதித்திருப்பதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

இது தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் கலாநிதி தீபிக உடகம, அனைத்து உள்ளுராட்சி ஆணையாளர்களுக்கும் கடிதங்களை அனுப்பி வைத்துள்ளார்.

இவ்வாறான நடவடிக்கைகள் கண்டனத்துக்கு உரியது என்று அவர் தமது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share:

Author: theneeweb