சுகாதார அமைச்சர் ராஜிதவிற்கு எதிராக இன்றும் ஆர்ப்பாட்டங்கள்

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவிற்கு எதிராக மாலபே நெவில் பெர்னாண்டோ மருத்துவமனையின் பணியாளர்கள் சிலர் இன்றை தினம் சுகாதார அமைச்சுக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த மருத்துவமனையை அரசாங்கத்திற்கு கையப்படுத்தியதாக பொய்யான கருத்தை வெளியிட்டதாக குற்றம்சாட்டி அவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை, காவல்துறை நிதி மோசடி விசாரணை பிரிவிற்கு முன்னால், சுகாதார அமைச்சருக்கு எதிராக இன்றைய தினம் அமைதி ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.

சுகாதார அமைச்சருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடு தொடர்பில் துரிதமாக விசாரணையை மேற்கொள்ளுமாறு கோரி இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.

இதனுடன் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவின் செயல்பாடுகளுக்கு எதிராக இன்றைய தினம் பதுளை, பொலன்னறுவை, அம்பாறை, அம்பலாங்கொட மற்றும் மாத்தறை உள்ளிட்ட பகுதிகளிலும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

Share:

Author: theneeweb