வருடாந்தம் 80 கோடி ரூபா நஷ்டத்தில் இயங்கும் இலங்கை மின்சார சபை!

இலங்கை மின்சார சபை அதிகாரிகள், மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சு ஆகியன இணைந்து இலங்கை மின்சார சபைக்கு கடுமையான நிதி நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளன.

இதனால் இதுவரையில் வருடாந்தம் 80 கோடி ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக மின்சாரத்தை பயன்படுத்துபர்களின் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

கொழும்பு – ஜனநாயக இடதுசாரிகள் முன்னணி காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அச் சங்கத்தின் இணைப்பாளர் சங்ஜீவ தம்மிக்க மேற்கண்டவாறு கூறினார்.

இலங்கை மின்சார சபை  தற்போது  ஒரு மின்சார அலகுக்கு வழங்கப்பட்ட செலவு 18 ரூபாவிலிருந்து 23 ரூபா வரை அதிகரித்துள்ளது. மின்சார செலவு  மற்றும் மின்சார கொள்வனவுச் செலவு ஆகியன அதிகரிப்பதற்கான பிரதான காரணம் அவசர கால நிலையில் மேற்கொள்ளப்படும் மின்சார கொள்வனவுகளில் ஏற்பட்ட ஊழல்கள் மற்றும் மோசடிகள் ஆகும். மத்திய வங்கி பிணைமுறி மோசடியை விடவும் இது பாரிய மோசடியாகும் எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.

மத்திய வங்கி மோசடி 13 பில்லியன் ரூபாய்கள் ஆக இருந்தது. ஆனால் 13 பில்லியனுக்கும் அதிகமான நிதி மோசடி ஆண்டுதோறும்  இலங்கை மின்சார சபை   இல் நடக்கிறது.

இந்த நிதி மோசடிகள் 2015 இல் தொடங்கின. இலங்கை மின்சார சபை  மற்றும் மின்வலு எரிசக்தி அமைச்சு ஆகியவை இணைந்து இந்த நிதி மோசடிகளில் ஈடுபட்டுவருகின்றன. தனியார் மின் நிலையங்களிலிருந்து ஒரு குறுகிய கால அடிப்படையில் அறிமுகப்படுத்திய மின்சார கொள்வனவு மூலம் இந்த மோசடி ஆரம்பமானது.

இலங்கை மின்சக்தி சட்டத்தின் 43 வது பிரிவின் கீழ் விலைமனுக்கோரல் முறைமை மூலம்  மின்சார கொள்வனவு மற்றும் மின்னுற்பத்தி நிலையங்கள் அமைத்தல் போன்றவற்றுக்கான நடைமுறைகள்  பின்பற்றப்பட வேண்டியிருந்தாலும், மின்சார சபை சட்டத்தை மீறுவதன் மூலம் மின் கட்டணத்தை அதிக விலைக்கு மின்சாரம் கொள்வனவு செய்கிறது. இதற்காக முறையான அனுமதி பெறவில்லை.

2016 ஆம் ஆண்டில் 100 மெகாவாட் மின்சாரம் கொள்வனவு செய்யப்பட்டது. அன்று ஆரம்பித்த கொள்வனவால் மோசடியும் பெரிதாகி இன்று  இந்த மோசடி 700 மில்லியன் மெகாவாட் வரை இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஐந்து வருடங்களில் இலங்கை மின்சார சபையினால் 60 பில்லியன் ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளது. இந்த மோசடிகளைத் தவிர்ப்பதற்காக இலங்கை மின்சார சபையானது இலாபகரமானது மற்றும் மின் கட்டணத்தை குறைக்க முடியும். ஆனால் அதை செய்வது இல்லை.

ஏ.எஸ்.எம்பிலிபிட்டிய மின் உற்பத்தி நிலையத்திலிருந்து மின்சாரத்தை இலங்கை மின்சார சபை கொள்வனவு செய்துவருகின்றது. இந்த தனியார் நிறுவனத்திலிருந்து 2005 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை பத்து வருடங்களாக  இவ்வாறு மின்சாரத்தை கொள்வனவு செய்துள்ளது .ஒப்பந்த அடிப்படையில் பெரும் இந்த மின்சார கொள்வனவிற்காக 18 மில்லியன் ரூபாவை இலங்கை மின்சார சபை ஏ.எஸ்.எம்பிலிபிட்டிய மின் உற்பத்தி நிலையத்துக்கு வழங்கியுள்ளது.

ஒப்பந்த காலம் முடிவடைந்த பின்னரும் அதே தனியார் மின் உற்பத்தி நிலையத்திலிருந்து 2016 ஆம் ஆண்டு முதல் மீண்டும் மின்சாரத்தை கொள்வனவு செய்ய இலங்கை மின்சார சபையும் மின்சக்தி எரிசக்தி அமைச்சும் முடிவெடுத்தது. இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதியின் பின்னர் தான் மின்சார கொள்வனவு செய்யவேண்டுமென்பது மின்சாரச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் 2016 ஆம் ஆண்டு முதல் மின்சார கொள்வனவு செய்ய இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதி இல்லாமல் அமைச்சரவை அனுமதியுடன் மின்சார கொள்வனவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டு ஒப்பந்த காலம் முடிவடைந்தும் 2016 – 2017 ஆம் ஆண்டு எவ்வித அனுமதியும் இல்லாமல் மீண்டும் ஏ.எஸ்எம்பிலிபிட்டிய மின் உற்பத்தி நிலையத்தில் மின்சாரத்தை கொள்வனவு செய்ய முடிவெடுத்தது.  2016 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரை கிட்டத்தட்ட 76 மில்லியன் ரூபா மின்சார கொள்வனவுக்காக இ.மி.ச முதலிட்டுள்ளது.

குறைந்த விலையில் மக்களுக்கு மின்சாரத்தை வழங்க வேண்டுமென்ற கொள்கையும் மாறி ஊழலுக்காக மின்சாரம் என்ற நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். 2015 -20 பில்லியன் இலாபம் பெற்ற இலங்கை மின்சார சபை 2016 இல் 13 பில்லியன், 2017 இல் 21 பில்லியன், 2018 இல் 50 பில்லியன், 2019 இல் 80 மில்லியன் என நட்டமடைந்துவருகிறது.

ஏ.எஸ் எம்பிலிபிட்டியவில் மின்சார கொள்வனவு செய்ததில் 32 பில்லியன். துருக்கி கப்பல் மூலம் மின்சார கொள்வனவு செய்ய 15 பில்லியன், இ.மி.ச பொறியியலாளர்களுக்கு விசேட சம்பளம் வழங்கியதால் 6 பில்லியன், என பல காரணங்களினால் தான் 82 பில்லியன் ரூபா நாட்டம் ஏற்பட்டுள்ளது.

இலங்கை மின்சார சபை மேற்கொள்ளும் இத்தைகைய ஊழல் மோசடிகள் தொடர்பாக மின்சாரத்தை பயன்பபடுத்துவோர் சங்கம்  என்ற அடிப்படையில் நிதி குற்றவியல் புலனாய்வு திணைக்களத்துக்கு கடந்த மாதம் 13 ஆம் திகதி முறைப்பாடு ஒன்றை தெரிவித்தோம். அது தொடர்பாக 4 மணி நேர வாக்குமூலத்தையும் நாம் வழங்கியுள்ளோம்.

அவசரகால மின்சார கொள்வனவு மட்டுமின்றி இலங்கை மின்சார சபையின் அதிகாரிகளின் இன்னும் பல செயற்பாடுகள் காரணமாக குறித்த இலங்கை மின்சார சபை நட்டத்தை எதிர்கொள்கிறது. இந்த நட்டத்தை மக்கள் தான் செலுத்த வேண்டும். என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share:

Author: theneeweb